Our Feeds


Monday, August 30, 2021

www.shortnews.lk

BREAKING: கொரோனா ஜனாஸா அடக்குவதற்கு அம்பாறை, புத்தளம், திருகோணமலை மாவட்டங்களில் புதிய மயானங்கள்

 



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மயானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் மேலும் 2 ஏக்கர் நிலப்பரப்பை பொது மயானத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு கடந்த வாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓட்டமாவடியில் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 2,264 என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »