Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: 20 ஆண்டுகளின் பின் ஆப்கானை விட்டு மொத்தமாக வெளியேறியது அமெரிக்க படைகள் - நாடு முழுவதும் கொண்டாட்டம் - ஆப்கன் முழுவதும் தாலிபன் வசமானது.

 



ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டிருந்த அமெரிக்க படைகள் முழுமையாக அங்கிருந்து வெளியேறியுள்ளன.


சுமார் 20 வருடங்களின் பின்னர், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க படைகள் வெளியேறியதை கொண்டாடும் வகையில், தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை நடத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள், இன்று காபூல் விமான நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே” என கூறியவாறு, தலிபான் உறுப்பினர்கள், காபூல் விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »