பிசிஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிசிஆர் பரிசோதனை நடத்துவதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ .6,500 ஆகவும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணமாக ரூ .2,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிசிஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையிலுள்ள ஆபத்தான மாஃபியாவை உறுதிப்படுத்துகிறது.
கொரோனா பேரழிவின் மத்தியிலும் வணிக நண்பர்களுக்கு மேடை அமைப்பதிலும் இந்த அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது தெளிவாகிறது.
◼️80 ரூபா அளவில் உள்ள விரைவான ஆன்டிஜென் கருவிக்கு தனியார் மருத்துவமனைகள் ரூ.2000-2500 வரை கட்டணம் அறவிடுவதோடு, உன்மையில் ஆன்டிஜன் பரிசோதனை 600 ரூபாவிற்கும் பிசிஆர் பரிசோதனைகள் 2000 ரூபாவிற்கும் மேற்கொள்ள முடியுமாகவுள்ளது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு முற்றிலும் முட்டாள்தனமானதோடு சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு, தற்போதுள்ள மருந்து வர்த்தக மாஃபியா நியாயமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
◼️அரச மருந்தக கூட்டுத்தாபணத்திற்கு ஆன்டிஜென் கருவிகளை இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்க அரசாங்கத்திற்கு ஒரு தவிர்க்க முடியாத பொறுப்பு இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிறுவனம் மருந்து ஏகபோகத்தை பராமரிக்க அனுமதித்து, அந்தக் கூட்டுத்தாபணம், அந்த பொறுப்பிலிருந்து கைகளைத் துடைத்துள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில், ஒரு கொடூரமான மற்றும் பீடனை தருனத்தில் மருந்து மோசடி நாட்டில் பரவலாக உள்ளதோடு அரசாங்கம் அதன் அரசாங்க கூட்டாளிகளுக்கு மற்றொரு சலுகையை வழங்குவதால் அதை உன்னிப்பாக கண்டும் காணததும் போல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
◼️கொரோனா பேரழிவை அடுத்து உயிருக்கும் மரணத்திற்கும் இடையே போராடும் அப்பாவி மக்களின் உயிர்களை இழந்து கொண்டிருக்கும் இத்தகைய நிலையில்,பழங்குடி பாணியிலான மாஃபியாக்களை உருவாக்க அனுமதிக்கும் அரசாங்கம் மக்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதுபோன்ற கேவலமான குற்றங்கள் நடக்க அனுமதிக்கப்படுவதை நாங்கள் வெறுக்கிறோம் என்பதோடு எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்.
◼️தேசிய மருந்த ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுத்தளத்தை அழிப்பது தற்செயலானது அல்ல என்பதோடு, தற்போதுள்ள இந்த மருந்து மாஃபியா மற்றும் தொடர்புடைய ஏகபோக நிறுவன செயல்முறைக்கு, மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இடையே ஒரு சதி உள்ளது என்பதை மறுக்க முடியாது. மற்றும் அது குறித்து உடனடியாக பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்திற்கு "வர்த்தமானியை ரிவேர்ஸ் பன்னுவது" என்ற மோசமான வரலாறு இருப்பதால், பிசிஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் உடனடியாக திருத்த வேண்டும் என்பதோடு, ஆன்டிஜென் சோதனைக்கு ரூ.600 ஆகவும் பிசிஆர் சோதனை.2000 ரூபாவாகவும் வரம்புக்கு உட்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டியதுதான்.
சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சி தலைவர்
