நாட்டில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொற்று நோய் குறித்த ஆலோசனை குழுவின் பரிந்துரைக்கமைய சுகாதார அமைச்சு, எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சினோபார்ம் தடுப்பூசி மூலம் மிகவும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகக்கூடிய 20 -30 வயதுக்கு இடைப்பட்ட வயது பிரிவினருக்கு, பைஸர் தடுப்பூசியை செலுத்துவதானது முறையற்றது என்றும், இது விஞ்ஞான பூர்வமான தரவுகளை மீறும் செயல் என்றும் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்குவதற்கான யோசனை அடங்கிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
