Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

2023க்குள் அரசாங்கம் நாட்டை ரனில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும்

 



2023க்குள் நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசாங்கம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


இப்போது பொதுஜன பெரமுனவுக்கு உதவியொருக்கு அக்கட்சி சலித்து விட்டது என்றும், இப்போது 69 லட்சம் பேரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட ரணில் விக்கிரமசிங்கவைப் புகழ ஆரம்பித்துவிட்டனர் என்றும் கூறினார்.

ஐ.தே.கவின் மொனராகலை மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்ற போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் சண்டையிடத் தேவையில்லை என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த எவருக்கும் எதிர்காலம் இல்லை என்பதை நினைவூட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »