ஹொரணை – கட்டுகஹதெனிய பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வீட்டுக்கு முன்பாக உள்ள மரத்தின் அருகே தனது எட்டு மாத குழந்தையை வைத்து விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட தாய் உட்பட 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயும் ஏனைய நபர்களும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்தப் பெண் தனது 8 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் வைத்துவிட்டு அங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று போது குழந்தை வீட்டின் அருகே உள்ள மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
