Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

வீதிகளில் நடக்க மக்கள் உயிருடன் இருப்பார்களா? ஆளுங்கட்சி MP பரபரப்பு பேச்சு

 



அரசாங்கம் தற்போதைய நிலைமையில் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிராமங்களில் உள்ள அப்பாவி மக்கள் நாளாந்தம் மூன்று வேளை உணவின்றி வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் எதற்காக வெளியில் நடமாடுகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இப்போது பட்டினியால் வாடும் அப்பாவி மக்களுக்கு வீதிகளில் நடந்து செல்வதற்கு உடலில் பலம் இருக்குமா எனவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »