Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

களுபோவில மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

 



கொழும்பு - களுபோவில மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, சிகிச்சைக்காக சாதாரண வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (08) காலை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவர் ருக்ஷான் பெல்லன, அரச மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »