Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

BREAKING: இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்- அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.

 



தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.


அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜமேய்க்கா, ப்ரூனே ஆகிய நாடுகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »