பொலன்னறுவை பிரதேசத்தில் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட அரிசியை அரசுடைமையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலன்னறுவ பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படாத அரிசித் தொகை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கையகப்படுத்தப்பட்டதையடுத்து, அவற்றை சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அரிசி ஆலைகளில் காணப்பட்ட அரிசித் தொகையைக் கையகப்படுத்தி விநியோகிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு, ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
