Our Feeds


Monday, September 6, 2021

www.shortnews.lk

பிரதமர் மஹிந்த – பீரிஸ் இத்தாலிக்கும், வத்திக்கானுக்கும் விஜயம்?

 



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இத்தாலிக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளனர்.


எதிர்வரும் 09ஆம் திகதி இந்த விஜயத்தை அவர்கள் இருவரும் மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் தொற்றினால் இரண்டு வருடமாக இராஜதந்திர விஜயங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்தாலியில் எதிர்வரும் வாரத்தில் நடக்கவுள்ள ஐரோப்பிய மாநாடொன்றில் இவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் மாநாட்டின் ஆரம்ப உரையை பிரதமர் மஹிந்த ஆற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விஜயத்தினிடையே வத்திக்கானுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சர் பீரிஸ் செல்வார்கள் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »