ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாகவும் தலிபான்கள் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக மொஹம்மட் ஹசன் அக்குந்த் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தலிபான்களின் இணை ஸ்தாபகரான அப்துல் கனி பராதர், அரசாங்கத்தின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலிபான் இயக்கத்தின் ஸ்தாபகர் முல்லா ஒமரின் மகன் முல்லாம மொஹம்மத் யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹக்கானி வலையமைப்பின் ஸ்தாபகரின் மகனான சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும், ஹிதாயதுல்லா பத்ரி பதில் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என தலிபான்களின் பேச்சாளர் ஸபியுல்லா முஜாஹித் அறிவித்துள்ளார்.
