இலங்கையில் பெருந்தொகை பணம் அச்சிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி 39.97 பில்லியன் ரூபா பணத்தை அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதனால் திறைசேரியின் பத்திரத்தில் காணப்பட்ட மொத்த பணத்தின் பெறுமதி செப்டெம்பர் 3ஆம் திகதி 1,221 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன் புதிதாக பணம் அச்சிடப்படவுள்ளதன் காரணத்தினால் இந்த பெறுமதி 1,261 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
