Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

#BREAKING: ஜனாதிபதி கோட்டாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அனுப்பியுள்ள அவசர கடிதம்.

 



சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.


சுமார் 08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என, நாட்டின் மூத்த பிரஜை மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்வதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகராக, ஒரு சமூக சேவையாளராக, ஒரு அரசியல்வாதியாக ரஞ்சன் ராமநாயக்க, பொது மக்களுக்கான சேவைகளை ஆற்றிவந்த ஒருவர் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »