Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

JUST_IN: பாடசாலைகளை தற்போது ஆரம்பிக்க முடியுமா? - சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில்

 



நாட்டில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.


கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால், அதற்கான அனுமதியை வழங்க முடியும் என அவர் கூறினார்.

எனினும், அவ்வாறான சூழ்நிலை தற்போது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, கல்வி அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான சூழ்நிலையை உருவாக்கி, அதனை கல்வி அதிகாரிகள் தம்மிடம் உறுதிப்படுத்தினால், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை தம்மால் வழங்க முடியும் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சினால் அந்த சூழ்நிலையை ஏற்படுத்த முடியாது எனவும், நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதே சுகாதார அமைச்சின் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொவிட் பரவலை தடுப்பதற்கும், மாணவர்களின் ஊடாக வீட்டிலுள்ளவர்களுக்கு கொவிட் பரவுவதை தடுப்பதற்குமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »