Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

அதிகமாக மரணித்தவர்கள் எந்த தடுப்பூசியை பெற்றவர்கள்? அதுரலியே ரதன ஹிமி கேள்வி

 



(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)


எவரேனும் ஒருவர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதேவேளை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் உள்நாட்டு மருத்துவத்தையும் மேற்கத்தைய மருத்துவத்தையும் இணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அதுரலியே ரதன தேரர் மேலும் பேசுகையில்,

கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக ஏதேனும் விசேட நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

இவ்வாறான வைரஸ் நிலைமையின்போது வைரஸ் தொடர்பான மருத்துவ நிபுணர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக தீர்மானம் எடுப்பதற்கு விசேட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அத்துடன் ஆயுர்வேத மற்றும் யுனானி போன்ற மருத்துவ துறைகளை சேர்ந்தவர்கள் இந்த விசேட குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள் என்பதனை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

அத்துடன் கொரோனா தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக மருத்துவர்களிடையே இணக்கப்பாடுகள் உள்ளனவா?

இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட எத்தனை பேர் இங்கு மரணித்துள்ளனர்?. எந்த தடுப்பூசியை பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் மரணித்துள்ளனர் என்று கேட்கிறோம்.

அத்துடன் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த மட்டுமே  முடியும். அத்துடன் 30 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக ஆராய வேண்டும்.

இதேவேளை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது கூட்டு மருத்துவ முறை அவசியமானது என்று சீனா போன்ற நாடுகள் கூறியுள்ளன. பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைகளையும் இணைக்க வேண்டும். இதன்படி தேசிய மருத்துவ துறையும், மேற்கத்தைய மருத்துவ துறையும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »