Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: தாலிபான்கள் ஆட்சி அமைவு - பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு இடையில் திரை, பெண்களுக்கு முழு உடல் மறைக்கும் ஆடை, முகத்திரை இல்லை.

 



ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவிகள் அபாயா  ஆடை  அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அல்லது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் குறைந்தபட்சம் திரையொன்று இருக்க வேண்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

பெண்களின் உரிமைகள் விடயத்தில். தலிபான்கள் தாம் முன்னர் பின்பற்றிய கடும் கொள்கைளிலிருந்து இப்போது சற்று தளர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு தலிபான்கள் அனுமதியளித்துள்ளனர்.

ஆனால், உடலை மூடும் வகையில் அபாயா (abaya ) ஆடை அணிந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

அத்துடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடைபெற வேண்டும் எனவும், 15 பேருக்கு குறைவான வகுப்புகளில் குறைந்தபட்சம் இரு பாலாருக்கும் இடையில் திரையொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்பின் முதல் தடவையாக தனியார் பல்கலைக்கழகங்கள் நேற்று திங்கட்கிழமை (06) இயங்க ஆரம்பித்தன.

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய நகரங்களான காபூல், கந்தகார், ஹேரத் போன்றவற்றில் உள்ள தனியார் பல்கலைக்கங்களில் மாணவர்கள், மாணவிகளுக்கு இடையில் திரைகள் அமைக்கப்படுவதாக அப்பல்கலைக்கழங்களின் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, காபூல் நகர பல்கலைக்கழகங்களில் மாணவ மாணவிகள் நேற்றும் இன்றும் பல்கலைக்கழக வகுப்புகளில் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவ்வகுப்புகளில் மாணவ மாணவிளுக்கு இடையில் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன,

ஆனால், அப்புகைப்படங்களிலுள்ள மாணவிகள் முகம் தெரியும் வகையிலேயே ஆடை அணிந்திருந்தனர். தலையை அவர்கள் மறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »