நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்க தயாராகிவரும் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தான் மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமாயின், “அமைச்சர்” ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புரிமைகளும் தனக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சீனா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள மத்திய வங்கி ஆளுநர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றுள்ள மிலிந்த மொரகொடவும் தனக்கு அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, வரலாற்றில் முதன்முறையாக அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகாரத்தை மிலிந்த மொரகொட வகிக்கும் பதவிக்கு வழங்கவுள்ளதாக அறியமுடிகிறது.
