Our Feeds


Thursday, September 9, 2021

www.shortnews.lk

JUST_IN: சிறையிலுள்ள தன் மனைவிக்கு தொலைபேசி அழைப்பெடுத்ததாக ரிஷாத் பதியுத்தீன் மீது புது குற்றச்சாட்டு

 



கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த போது, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 11:55 மணியளவில் ரிஷாத் பதியுதீனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அழைப்பை எடுத்த எம்.பி ரிஷாத் பதியுதீன், வெலிக்கடை மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மனைவியுடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த அழைப்பை எடுத்த வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை அதிகாரி இவரது கோரிக்கையை மறுத்துள்ளார்.

அது சிறைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து வந்த தொலைபேசி எண் நாடாளுமன்றத்திற்கு சொந்தமானது என்று சிறைத்துறை சந்தேகிக்கிறது. மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »