Our Feeds


Thursday, September 9, 2021

www.shortnews.lk

BREAKING: இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கும் டெல்ட்டா பரவும் ஆபத்து - ஆய்வில் புதிய தகவல்

 



உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் அதி வீரியம் மிக்க பரவல் தன்மையுடைய டெல்ட்டா வைரஸ் திரிபானது, இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


டெல்ட்டா திரிபானது முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய நிலை உள்ளதாக, சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

‘நேச்சர்’ சஞ்சிகை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டா திரிபானது, மனிதர்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்துசெல்லக்கூடியது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்டா கொரோனா திரிபுக்கு, இவ்வாறாக நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களும் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து செயற்படவேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »