Our Feeds


Friday, September 10, 2021

www.shortnews.lk

அமைச்சர்கள், MP க்களை பார்க்கும் போது கபரகொய்யா உடும்பாக மாறியதைப் போன்று உள்ளனர் - ஆனந்த தேரர்

 



அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தால் கொரோனாவை ஒழித்தால் அது பெரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ள முருதெட்டுவாவே ஆனந்த தேரர், இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் தத்தமது அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்காக அவசரகாலச்சட்டத்தை ஒருபுறமும் அத்தியாவசிய உணவு தொடர்பான சட்டமூலத்தை மறுபுறம் பயன்படுத்துகின்றனர் என்றார்.



உண்மையில் அவசலரகாலச்சட்டத்தை கொண்டு வரும் ஒவ்வோர் அரசாங்கத்தையும் நாம் எதிர்த்தோம். நாம் மாத்திரமல்ல.இதற்காக இன்று கைகைளை உயர்த்திய அனைத்து உறுப்பினர்கள், அமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சி அவசரகால சட்டத்தை கொண்டு வரும் போது எதிர்த்தனர்.

அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கொண்டு வரும் போது, ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தனர். எனவே இன்று அமைச்சர்கள், உறுப்பினர்களைப் பார்க்கும் போது கபரகொய்யா உடும்பாக மாறியதைப் போன்று உள்ளனர்.

உண்மையில் அவசரகால சட்டத்தை கொண்டு வந்து கொரோனாவை ஒழித்தால் அது சிறப்பு. இன்று மக்களுக்கு தேவை அவசரகால சட்டம் இல்லை.. இன்று மக்கள் வயிறு நிறைய உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைத் தேடுவதாகத் தெரிவித்த அவர், உண்மையில் கூறப்போனால் நாட்டுக்காக வேலைசெய்த ராஜபக்‌ஷர்கள் இல்லாமற் போய்விட்டனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »