Our Feeds


Monday, September 13, 2021

SHAHNI RAMEES

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது


  விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு அடுத்த வாரம் முதல் Pfizer தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

4 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதனிடையே, விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரை கிடைத்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் Pfizer தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »