இலங்கை விஞ்ஞானி பேராசிரியர் மலிக் பீரிசுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான “2021 Future Science” என்ற விருதை இலங்கையில் உள்ள சீன தூதரகம் வழங்கியுள்ளது.
பேராசிரியர் மலிக் பீரிஸ் தவிர, சீன பேராசிரியர் யூன் குவோக்யுங்கிற்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆய்வுக்காக பேராசிரியர் மலிக் பீரிஸ் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு பெற்றுள்ளார் என்றும் சீன தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ் பெற்ற இலங்கை விஞ்ஞானியான பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்கள் இலங்கையில் கொரோனாவில் மரணித்த உடல்கள் எரிக்கப்பட்ட நேரத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்வதினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை ஆரம்பம் முதல் அறிவியல் ரீதியாக கூறி வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
