Our Feeds


Thursday, September 30, 2021

ShortNews Admin

SHORT_BREAKING: புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனாவின் பாதிப்பு 80 % அதிகம் - ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக ஆய்வில் முடிவு



உலகளவில் கொரோனா தொற்றுப் பாதிப்புத் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


அந்தவகையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்  இணைந்து நடத்திய ஆய்வில் புகை பிடித்தால் இதய நோய், புற்றுநோய் உட்பட பிற நோய்கள் பாதிப்பது போலவே கொரோனாவும் தீவிரமாக பாதிக்க வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகை பிடிப்போருக்கு கொரோனா பாதிப்பின் அளவு 80 சதவீதம் உள்ளதென்றும், இதனால்  இவர்கள் இறக்கவும் வாய்ப்பு உள்ளதென்றும் இவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »