Our Feeds


Saturday, October 2, 2021

ShortNews

மின்சாரத்தில் சிக்க வைத்து 19 வயதான இளைஞர் கொலை: ஒருவர் கைது!



(எம்.மனோசித்ரா)


வத்தேகம பொலிஸ் பிரிவில் மீகமவத்த பிரதேசத்தில் இரு தரப்பினருக்கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் வீட்டு வளாகத்துக்குள் சென்று தகாத வார்தைகளால் திட்டிக் கொண்டிருந்த போது , குறித்த வீட்டு உரிமையாளரால் வைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்க வைத்து குறித்து நபரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


படுகாயமடைந்த நிலையில் மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 19 வயதுடைய யட்டிராவண – வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய மீகமவத்த பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தேகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »