Our Feeds


Saturday, October 2, 2021

ShortNews

முதல் நாளிலேயே விதிமுறைகளை மீறிய 9 பஸ்கள்!



தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நேற்று (01) தளர்த்தப்பட்ட நிலையில், சுகாதார வழிகாட்டல்களை மீறி ஆசன எண்ணிக்கையை விட அதிகளவான பயணிகளை ஏற்றிச்சென்ற 9 தனியார் பேருந்துகளை மடக்கிப் பிடித்துள்ளதாக மேல்மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.


களுத்துறை, அலுத்கம, மதுகம பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி வருகைத்தந்த தனியார் பேருந்துகளே இவ்வாறு சுகாதார விதிமுறைகளை மீறி பயணித்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »