Our Feeds


Sunday, November 7, 2021

SHAHNI RAMEES

கண்ணிவெடி அகற்றப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகள் கையளிப்பு!


 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோர் அண்மையில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

270 குடும்பங்கள் வசிப்பதற்காக இந்தக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது 87 ஆயிரத்திற்கும் அதிகமான மிதி வெடிகளும், 1 இலட்சத்து 96 ஆயிரத்து 985 தோட்டாக்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »