பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பதவியிலிருந்தபோது சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற நகைகள், வைரங்கள், கைக் கடிகாரங்கள் ஆகியவற்றை அரச கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகவே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தோஷகானா 2 என இவ் வழக்கு அழைக்கப்படுகிறது.
நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் என மொத்தம் 17 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
