மஹபாகே பொலிஸ் பிரிவில் இன்று (4) இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 வயதான ஒருவர் செலுத்திய ஜீப் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து பாதையின் எதிர்த்திசையில் பயணித்த நான்கு வாகனங்களை மோதித் தள்ளியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
இந் நலையில் விபத்தை ஏற்படுத்திய தனது 16 வயது மகனுக்கு வாகனம் செலுத்த சந்தர்ப்பம் அளித்தமைக்காக அவரது தந்தையையும், வாகன விபத்து தொடர்பில் 16 வயது மகனையும் கைது செய்ததாக அவர் மேலும் கூறினார்.