Our Feeds


Friday, March 6, 2026

Sri Lanka

அமெரிக்காவை எதிர்த்து ஈரானிய கப்பல்களில் இருந்தவர்களை காப்பாற்றிய AKD அரசின் மனிதாபிமானத்தை பாராட்டுகிறோம் - கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் ரஸ்மின் கருத்து.




அமெரிக்கா இலங்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் என தெரிந்தே இலங்கை கடலுக்கு அருகில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் கப்பல்களை மீட்டெடுத்து பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த இலங்கை ஜனாதிபதியின் செயல் மிகவும் மதிக்கத் தக்கது. 


யுத்தத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் ஆனால் மனிதாபிமான உதவி வழங்கும் எனக் கூறி இந்தியப் பெருங் கடலில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கான ஈரானின் இரண்டு கப்பல்களை மீட்டு அதிலிருந்தவர்களுக்கு உதவி வழங்க முன்வந்தது இலங்கை. இலங்கை அதிபரின் இந்த செயல் மிகவம் பாராட்டுக்குறியது. என இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம் பெற்ற ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் சமூக செயல்பாட்டாளர் சகோதரர் ரஸ்மின் MISc கருத்து வெளியிட்டார்.


நேற்றைய தினம், ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இலங்கை உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு முட்டை மேல் நடக்கிறது என அல்-ஜஸீரா குறிப்பிட்டிருந்தது. உண்மையில் இந்த யுத்தத்தில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் அளவுக்கு இலங்கைக்கு பலமில்லை. ஆனால் இலங்கை அரசு மனிதநேயத்துடன் ஈரானிய கப்பலை காப்பாற்றியது வரவேற்க்கத் தக்கது. பாராட்டுக்குறியது என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »