Our Feeds


Friday, March 6, 2026

Zameera

பொது அவசரகால நிலையை நீடிக்கும் யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


 பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த யோசனைக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் மாத்திரமே கிடைத்தன. 

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 81ஆம் இலக்க விடயப்பரப்பிற்கு அமைவான இந்த யோசனை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமநாயக்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். 

இதேவேளை, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட யோசனையும் முறைப்படி நிறைவேற்றப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »