ஊடகங்கள் உண்மைகளை தான் சொல்ல வேண்டும். ஆனால் உங்கள் ஊடகம் தொடர்ந்து ஈரானைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. உங்கள் ஊடகத்திற்கு நான் கருத்து சொல்ல மாட்டேன். என Associated Press சர்வதேச ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இலங்கைக்கான ஈரான் தூதுவர் பதிலளித்தார்.
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டு ஆக்கிரமிப்பு தாக்குதலை கண்டித்து இன்று கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்தில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இந்த சம்பவம் நடைபெற்றது. #ShortNews
