சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமற்றது. நாட்டிலுள்ள அறிபூர்வமானவர்களைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான நடவடிக்கையே எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறிருக்கையில் தொழிற்சங்கம் ஒன்றின் தலைவராக மாத்திரமே காணப்படும் முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் நியமனம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வி;டயங்கள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெளிவுபடுத்துகையில் ,
ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக மாத்திரம் இருப்பதானது இந்த பதவிகுரிய பொருத்தமான தகுதி அல்ல. முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு பதவிகளை வழங்குவதற்கு நாங்கள் விரோதமானவர்கள் அல்ல. ஆனால் பல்கலைக்கழக வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளமையை பொருத்தமற்றதாகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருதுகிறது என்று தெரிவித்தார்.