Our Feeds


Friday, November 12, 2021

SHAHNI RAMEES

சீனத் தூதர் சந்திப்பிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாற்றம்


 இலங்கைக்கான சீனத் தூதரை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளதாகவும் தனது கடுமையான அதிருப்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிந்தது. இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகிவரும் நிலையில்,அந்த தரப்பை சமரசப்படுத்த சீனா தொடர்பான சில எதிர்மறையான முடிவுகளை இலங்கை அரசு அண்மையில் எடுத்தது. இதனால் அதிருப் தியடைந்துள்ள சீனா, ஓர் அரசியல் நகர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் முயற்சியை ஆரம்பித்தது.

அதற்கமைய , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவுடன் பேச்சு நடத்த விரும்பு வதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தகவல் அனுப்பியது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் தொடர்புகொண்டு, தமது விருப்பத்தை தெரிவித்து, சந்திப்பிற்கும் அழைப்பு விடுத்தது.

முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பிற்கு செல்வதை இந்தியா விரும்பாது என்பதால், இரா.சம்பந்தன் மாத்திரம் சீனத் தூதுவரை சந்தித்து பேசுவதென கூட்டமைப்பு முடிவுசெய் துள்ளது. எனினும், இந்த சந்திப்பை இந்தியா விரும்பவில்லை. இது தொடர்பான தமது அதிருப் தியை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேற்று இந்தியத் தூதரை சந்திப்பதற்கு முன்பாக சீனத் தூதரை சந்திக்க கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், இந்தியாவின் அதிருப்தியையடுத்து, சீனத் தூதரை சந்திப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பமான நிலைமை தோன்றியுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடந்த இலங்கை இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டத்தில் சம்பந்தன் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென கூறியிருந்த சம்பந்தன் இறுதிநேரத்தில் அதில் கலந்துகொண்டாரென அறியமுடிந்தது. இந்த சங்கத்தின் தலைவராக சமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். கூட்டம் முடிந்தபின்னரே இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் கலந்துகொள்ள சம்பந்தன் சென்றாரென அறியமுடிந்தது.

(அரசியல் செய்தியாளர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »