Our Feeds


Wednesday, December 29, 2021

SHAHNI RAMEES

2022இல் ஆவது வாகன விலை குறையுமா? வெளியான புதிய அறிவிப்பு

 

உலகின் பல நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அதிகளவில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது.

2022 க்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை குறையக்கூடும் என்று காக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கூறுகிறது.

ஆனால் அதுவரை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை மேலும் உயரலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கார் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பிற நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தியதால் புதிய காரின் விலையும் உயர்ந்துள்ளது.

சமீபத்திய கார் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக காக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கூறுகிறது.

இதேவேளை, இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »