பண்டிகை காலப் பகுதியில் சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
நாடு முழுவதும் உள்ள சதொச நிலையங்களில் இன்று (27) முதல் இவ்வாறு அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விசேட பொதியில் சீனி கொள்வனவு செய்யாத நுகர்வோருக்கு, மேலதிகமாக 2 கிலோகிராம் அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
1998 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கே இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த சலுகை இன்று (27) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை வழங்கப்படும் என அவர் கூறுகின்றார்.
புதுவருட பிறப்பை முன்னிட்டு ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
130 ரூபா விதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.