Our Feeds


Friday, July 17, 2026

SHAHNI RAMEES

ரகித, சரித உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு...

 


முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரும் இன்று (17) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 


அவர்கள் மூவரும் சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வௌியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 


'ஹரக் கட்டா' தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் முன்னதாக விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »