Our Feeds


Tuesday, December 28, 2021

SHAHNI RAMEES

நாளை(29) முதல் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு



எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இதன்போது, பெரும்பாலும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 14 ரூபாவாக காணப்படும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 2 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

அதற்கமைய, ஏனைய பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பஸ் சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்திருந்த யோசனைகள் ஊடாக கோரியிருந்தன.

எவ்வாறாயினும், 7.5 முதல் 10 சதவீத்திற்கு உட்பட்ட பஸ் கட்டண அதிகரிப்பை வழங்கவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »