Our Feeds


Thursday, December 30, 2021

SHAHNI RAMEES

பாகிஸ்தானில் தொடரும் அதிரடி | பிரியந்த குமார படுகொலை - இதுவரை 85 சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

 

பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கடந்த செவ்வாய்க்கிழமை  லாஹூர் மேல் நீதிமன்றம் சியல்கோட் மாவட்ட பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் , பிரியந்த குமாரவை கொலை செய்யும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மேலும் நூற்றுக்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராக வேண்டாம் என சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »