Our Feeds


Tuesday, December 28, 2021

SHAHNI RAMEES

பிரதமரின் திருப்பதி விஜயத்திற்கு தனியார் ஜெட் விமானம் இலவசமாக வழங்கப்பட்டது – யோஷித

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,கடந்த 23 ஆம் திகதி  புனித யாத்திரைக்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவின் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு நீல நிற எம்ப்ரேயர் லெகசி 600 வணிக ஜெட் விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது

இதனை அடுத்து குறித்த  ஜெட் விமானத்தின் உரிமையாளரால் கட்டணம் ஏதுமின்றி பிரதமருக்கு ஜெட் விமானம் வழங்கப்பட்டதாகவும்  இந்த ஜெட் விமானத்தை வழங்கியமை நல்லெண்ணத்தின் அடையாளமாகும் எனவும்  பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“பிரதமரின் நண்பர் ஒருவர், திருப்பதிக்குப் பயணம் செய்ய அவருக்கு அந்த விமானத்தை இலவசமாகக் கொடுத்தார். அந்த நபரின் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரதமரின் நண்பர்,இது நல்லெண்ணத்தின் அடையாளமாகும் என்று அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »