Our Feeds


Tuesday, December 28, 2021

SHAHNI RAMEES

மக்கள் மனதில் நெருப்பு எரிகிறது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் தாக்கு

 

நாட்டு மக்களின் வீடுகளிலுள்ள அடுப்புகளில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, அவர்களின் மனதிலேயே நெரிப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலைகளை அதிகரித்து, சிறந்த நத்தார் பரிசை வழங்கிய அரசாங்கம், கையிருப்பிலுள்ள டொலரைக் கடனாகச் செலுத்தி, புத்தாண்டு பரிசையும் வழங்கவுள்ளது என்றார்.

மக்கள் குறைகளைக் கேட்டறியும் ‘மனிதாபிமான சுற்றுலா’வின் இரண்டாவது விஜயத்தை அம்பலாந்தொட்டையில் நேற்று (27) ஆரம்பித்து, மக்களைச் சந்தித்துப் பேசி குறைகளை கேட்டறிந்தது கொண்டார்.

அத்துடன், ‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’ எனும் துண்டுப் பிரசுரத்தையும் வழங்கினார். மத்திய வங்கி ஆளுநரே டொலர் மாபியாவின் வஞ்சகர் எனக் கூறிய எதிர்க்கட்சி தலைவர், அவர் இந்நாட்டு மக்களினதும் ஏற்றுமதியாளர்களினதும் வாழ்க்கையுடன் விளையாடி கொண்டிருக்கின்றார் என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த நபரொருவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், மொட்டு பொருளாதார சீரழிவின் பிரதான சூத்திரதாரி அவர் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த குற்றத்தின் பொறுப்பில் இருந்து அவரால் தப்பிக்க முடியாது.

நாட்டுக்கு இந்தளவு சாபத்தை கொண்டு வந்த அமைச்சர்களுக்கு, மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »