கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்கவிற்கு, வாடகைக்கு காரொன்றை பெற்றுக்கொள்வதற்காக மாதாந்தம் ஐந்து லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்ய மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.
ரோஸி சேனாநாயக்க இதுவரை பயன்படுத்தி, உத்தியோகப்பூர்வ வாகனம், திருத்த பணிகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, வாடகைக்கு காரொன்றை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே, ரோஸி சேனாநாயக்க, மாநகர சபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
செலவீனத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்ற இந்த தருணத்தில், பெருமளவு தொகையை செலவிட்டு வாடகைக்கு வாகனத்தை பெற்றுக்கொள்வது முறையற்றது என எதிர்கட்சியினர் கூறியுள்ளனர்.
எதிர்கட்சியின் எதிர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாக கூறிய ரோஸி சேனாநாயக்க, மாற்று வழி இல்லாமையினால், விருப்பமின்றியேனும், இதனை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.