தெனியாய, கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு பெற்ற குழு வெற்றியடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணி 39 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு பெற்ற அணி 55 ஆசனங்களை பெற்று வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.