தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆளுகைக்கு உட்பட்ட தலவாக்கலை-லிந்துலை நகர சபையில் இன்றைய தினம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையினால் குறித்த பாதீடு தோல்வியடைந்துள்ளது.
இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.