பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
உலகின் மிக உயரமான போர்க்களம் என வர்ணிக்கப்படும் சியாசென் பனிச்சரிவில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்தது.
இதில் இர்ஃபான் பெர்சா மற்றும் ராஜா ஜீஷான் ஜஹான்ஜெப் என்ற இரண்டு மேஜர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல்களில் முக்கிய இடமாக விளங்கும் சியாசென்னில் பல வீரர்கள் இதற்கு முன்னர் கடுங்குளிராலும், பனிசரிவுகளாலும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.