Our Feeds


Thursday, December 30, 2021

SHAHNI RAMEES

உயர் தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின!

 

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான பெறுபேறுகள் நேற்று (29) இரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்புக்காக 48,810 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் மீள் திருத்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0112 784 537, 0112 784 208, 0113 188 350 அல்லது 0113 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தை அழைக்கலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »