Our Feeds


Wednesday, December 29, 2021

SHAHNI RAMEES

டொலர் கிடைக்கவில்லை, பிச்சை எடுக்கிறது அரசாங்கம் - எதிர்க்கட்சி எம்.பி கடும் சாடல்

 

அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களையோ அல்லது ஜனாதிபதியின் செயலாளர்களையோ மாற்றுவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நிறைவடையும்போது சுற்றுலாத்துறையின் ஊடாக 3.5 பில்லியன் டொலர்கள் நாட்டுக்குக் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சிரித்துகொண்டே கூறுகிறார். ஆனால் உண்மையில் அரசாங்கம் டொலர்களுக்காக  வெளிநாடுகளில் பிச்சை எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும், தற்போதைய அரசாங்கம்போல வெளிநாடுகளுக்கு சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை எனவும் அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »