இலங்கை கிரிக்கெட் வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜீவன் மெண்டிஸ்,
இது இலங்கை கிரிக்கெட்டுடனான ஒரு நம்பமுடியாத பயணமாகும், 2010 ஆம் ஆண்டு முதல் நான் அதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறேன்.
இந்த அற்புதமான பயணம் முழுவதும் நான் கற்றுக்கொண்ட பல மதிப்புமிக்க பாடங்கள் மற்றும் அழகான நினைவுகள். எனது பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜீவன் மெண்டிஸ் இறுதியாக 2019 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போது இலங்கை அணியில் விளையாடினார்.
