Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

ஜனாதிபதி அடிக்கடி பயணிக்கும் வீதியில் மக்களை நிற்க வேண்டாம் என அச்சுறுத்திய பொலிஸார்! (VIDEO)



மிரிஹான வீதியில் ஜனாதிபதி அடிக்கடி பயணிப்பதால் அங்குள்ள பால் மா கடை ஒன்றில் வரிசையில் நின்ற மக்களை பொலிஸார் பலவந்தமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.


ஜனாதிபதி பயணிக்கும் குறித்த வீதியில், மக்கள் பால்மா வாங்க வரிசையில் நிற்பதால் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால் மா கடையொன்றில் வர்த்தகத்தை கட்டுப்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறித்த வீதியில், பல நாட்களாக நீண்ட வரிசையில் நின்றவர்கள் இன்று நிற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »