Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மலுகு தீவின் கிழக்குப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது.

இதனால், டார்வின் நகரில் இருந்த வீடுகள் சில விநாடிகள் வரை குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீதியில் தஞ்சமடைந்தனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதற்கான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அவுஸ்திரேலியாவில் உணரப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »